யார் பிரிக்க முடியும் நாதா
உந்தன் அன்பிலிருந்து தேவா
1.
என் சார்பில் நீர் இருக்க
எனக்கெதிராய் யார் இருப்பார்
மகனையே நீர் தந்தீரய்யா
மற்ற அனைத்தும் தருவீர் ஐயா உம் – யார்
2.
தெரிந்துகொண்ட உம் மகன்(கள்) நான்
குற்றம் சாற்ற யார் இயலும்
நீதிமானாய் ஆக்கிட்டீர்
தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே – யார்
3.
நிகழ்வானவொ வருவனவோ
வாழ்வோ சாவோ பிரித்திடுமோ
அன்பு கூர்ந்த கிறஸ்துவினால்
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் – யார்
4.
வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ
பகைமைகளோ பழிச்சொல்லோ
பொறாமைகளோ பிரித்திடுமோ – யார்